லாரியை ஏற்றியுள்ளார். பின், அது கட்டுப்பாட்டை இழந்து

நள்ளிரவு தாண்டி, அதிகாலை வரையிலான நேரம், டிரைவர்களை அசதிக்குள்ளாக்கும் தருணம். களைப்புடன் வாகனத்தை இயக்கும்போது, தன்னையறியாமல் டிரைவர் துாங்கி விடுவதுண்டு. துாக்கம் வருவது போல் உணர்ந்தால், இடையில் உள்ள டோல்கேட் அல்லது உகந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தி, ஓய்வெடுத்த பின்னும், டீ உள்ளிட்ட பானங்களை அருந்தி சோர்வு நீங்கிய பின்னும், வாகனங்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இதை டிரைவர்கள் பின்பற்று வதில்லை. வாகன உரிமையாளர்களும் அறிவுறுத்துவதில்லை. பல நேரங்களில், நாள் கணக்கில் டிரைவர்கள் போதிய ஓய்வின்றி லாரிகளை இயக்க, உரிமையாளர்களால் வற்புறுத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. நேற்று கோர விபத்து நேர்ந்தபோது நேரம் அதிகாலை 3:30 மணி. உயிர்களைப் பலிவாங்கிய கன்டெய்னர் லாரி, கொச்சியில் இருந்து புறப்பட்டிருக்கிறது.


பெங்களூருவுக்கு வேகமாகச் செல்லும் எண்ணத்தில், கன்டெய்னர் லாரி டிரைவர் ஹேமந்த்ராஜ், ஓய்வின்றி இயக்கியுள்ளார்.'துாக்கக் கலக்கத்தில்தான் லாரி டிரைவர், மையத்தடுப்பின் மீது லாரியை ஏற்றியுள்ளார். பின், அது கட்டுப்பாட்டை இழந்து, 19 உயிர்களைப் பலிவாங்க காரணமாக அமைந்திருக்கிறது. மையத்தடுப்பின் மீது ஏறிய பின்தான், லாரி டயர் வெடித்திருக்க வேண்டும். டயர் வெடித்ததால்தான் விபத்து நேர்ந்ததாக கூறுவது, திசை திருப்புவதற்காகத் தான்' என்று, விபத்து கோரத்தைப் பார்த்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கூறுகின்றனர்.