ஹரியானாவில் சூயிங் கம் விற்பனைக்கு தடை

சண்டிகர்: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, சூயிங் கம் மெல்லுவதற்கும், விற்பனைக்கும் ஜூன் 30 வரை ஹரியானா அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா தொற்று இருமல், தும்மல் வழியாக நீர்த்திவலை மூலம் பரவ வாய்ப்புள்ள சூழலில், சூயிங் கம் மூலம் கொரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்புள்ளதால் தடை விதிக்கப்படுவதாக ஹரியானா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து எந்தவொரு வகையில் மற்றவர்களுக்கு பரவ கூடாதென்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றவர்கள் முன்னிலையில் எச்சில் உமிழ்வதை தவிர்க்க வேண்டும். தற்போதைய சூழலை கட்டுப்படுத்த தேவைப்படுவதால் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் சட்டம் 2006ன் படி தடை விதிக்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அமன் தீப் சவுகான் தெரிவித்துள்ளார்.