கொரோனாவுடன் போராட கைகொடுக்குமா டி.பி., தடுப்பு மருந்து

வாஷிங்டன்: டிபி நோயை தடுக்க குழந்தைகளுக்கு போடப்படும் BCG தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக செயல்படும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் எனப்படும் டிபி நோயை தடுக்க கூடிய BCG தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த 1948 ஆண்டு முதலே இந்த தடுப்பூசி இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் போடப்பட்டு வருகிறது. டிபி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்ததை அடுத்த இந்த தடுப்பூசி போடும் கொள்கையை ஐரோப்பிய நாடுகள் கைவிட்டு விட்டன.

இந்நிலையில் நாடுகளின் BCG தடுப்பு கொள்கைக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக நியூயார்க் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.